search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய மந்திரி அல்போன்ஸ் கன்னம்தானம்"

    மத்திய மந்திரி அல்போன்ஸ் கன்னம்தானம் இன்று சபரிமலையில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார். #Sabarimala #AlphonseKannanthanam
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜை விழாவுக்காக கடந்த 16-ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 17-ந்தேதி முதல் கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    கோவிலில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்யவில்லை என்று புகார்கள் கிளம்பியது. கேரளா பலத்த மழையால் பாதிக்கப்பட்ட போது சபரிமலையிலும் பெரும் சேதம் ஏற்பட்டது. இங்குள்ள கழிவறைகள், பக்தர்கள் ஓய்வு எடுக்கும் விடுதிகள் அனைத்தும் இடிந்தன. இவற்றை இதுவரை சீரமைக்கவில்லை என்று பக்தர்கள் குற்றம் சாட்டினர்.

    இதையடுத்து கேரளாவைச் சேர்ந்த மத்திய மந்திரி அல்போன்ஸ் கன்னம்தானம் இன்று சபரிமலை சென்றார். அங்கு பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார். அவருடன் அதிகாரிகள் மற்றும் பா.ஜனதா கட்சியினரும் இருந்தனர்.  #Sabarimala #AlphonseKannanthanam

    கேரளாவில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுடன் நிவாரண முகாமில் தூங்கியதாக கூறி புகைப்படத்தை வெளியிட்ட மத்திய மந்திரியை நெட்டிசன்கள் தாறுமாறாக விமர்சித்தனர். #KerlaFloods #AlphonsKannanthanam
    கொழிஞ்சாம்பாறை:

    கேரளாவில் கடந்த 11 நாட்களாக பெய்த பேய் மழைக்கு கேரளாவே தண்ணீரில் தத்தளித்தது. வீடு, உடமைகளை இழந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் சங்கனாஞ்சேரியில் உள்ள எஸ்.பி. பள்ளியை முகாமாக மாற்றினர். அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டு உணவு, உடை, கம்பளி உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

    இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த மத்திய சுற்றுலாத் துறை மந்திரி அல்போன்ஸ் கன்னம்தானம், சங்கனாச்சேரி எஸ்.பி. பள்ளியில் உள்ள முகாமில் பொதுமக்களுடன் தூங்கினார். தான் தூங்குவதை புகைப்படம் எடுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ‘நான் நேற்று இரவு சங்கனாச்சேரி நிவாரண முகாமில் தூங்கினேன். பெரும்பாலான மக்கள் நாளை என்பது நிச்சயமற்றதாக உள்ளதை எண்ணி தூங்காமல் இருந்தனர்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த டுவீட்டை மோடி, அமித்ஷா, இந்திய பாஜக, கேரள பாஜக, பியூஷ் கோயல் ஆகியோருக்கும் டேக் செய்துள்ளார்.

    இந்த டுவிட்டர் பதிவு வைரலாகப் பரவியது. ஆனால், டுவிட்டரில் அவரது பதிவை பார்த்த பலர் அவரை கேலியும் கிண்டலும் செய்து விமர்சித்தனர்.

    ‘நீங்கள் தூங்கும்போது பெரும்பாலான மக்கள் தூங்கவில்லை என்பது எப்படி தெரியவந்தது? நீங்கள் ஆழ்ந்த உறக்கம் கொண்டீர்களா? என்று ஒருவர் கேட்டுள்ளார்.

    ‘சார் இது என்ன ஜோக்கா? இந்த மாதிரி நீங்கள் ஷோ காண்பிக்க தேவையில்லை. இதுபோன்ற அரசியல் விளம்பரங்களை கேரள மக்களால் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். மத்திய மந்திரியாக உள்ள நீங்கள் இதுபோன்ற சூழலில் மற்றவர்களுக்கு உதவி செய்ய முடியும். முதலில் அதை செய்யுங்கள்’ என்று மற்றொருவர் கூறியுள்ளார்.

    ‘உங்கள் தியாகங்களை உங்கள் மாஸ்டர்களுக்கு காட்ட வேண்டுமென்றால் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஈமெயில் அனுப்புங்கள். சமூக வலைதளங்களை தவிர்த்து, மீட்புப் பணிகள் நடந்த இடங்களிலோ, நிவாரணம் வழங்கும் இடங்களிலோ அல்லது மற்ற எந்த இடத்திலோ உங்களை நாங்கள் பார்த்ததே இல்லை’ என ஒருவர் கூறியிருக்கிறார்.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்திருப்பதை காண்பிக்கும் வகையில் மத்திய மந்திரி அல்போன்ஸ் செய்த முயற்சி, அவருக்கே பாதகமாக திரும்பிவிட்டது. #KerlaFloods #AlphonsKannanthanam
    ×